flashvortex

Thursday, April 5, 2012

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் : டக்ளஸ் தேவானந்தா

ஐ.நா மனித உரிமை பேரவை விவகாரம் தொடர்பில், இலங்கை பாரளுமன்றில் கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளனர்.

ஈ.பி.டி.பி கட்சியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இவ்விவாதத்தில் தெரிவிக்கையில், உண்மையை கண்டரியும் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்குழுவின் அறிக்கையில் தமக்கும், தமது கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் விமர்சனங்கள் இருந்துள்ளன. ஈ.பி.டி.பி கட்சியை ஓர் துணை இராணுவ குழுவாக அறிவித்தல் என்பது ஏற்றுக்கூடியதல்ல என தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளாமைக்கு வி.புலிகளை காரணம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளதாக கருதப்பட முடியும் என கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் லக்ஷ்மன் கிரியேல்ல தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், உலகின் புதிய நாடான தென்சூடானை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்களுக்கு சமமானது. இனப்பிரச்சினைக்கு தீர்வை விரைவாக முன்வைக்காவிட்டால் அது இலங்கையை பிளவுபடுத்தும் பேராபத்தையே தோற்றுவிக்கும்.

அமெரிக்க தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் 13 பிளஸ் தொடர்பாக விளக்கம் கேட்ட போது இலங்கை அரசு தரப்பு மைனம் சாதித்ததனாலேயே இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவை நிராகரித்து எம்மால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முனொழிவுகளை நடைமுறைப்படுத்துவோம் என நீங்கள் தான் உறுதியளித்தீர்கள். இப்போது அவற்றை நடைமுறைப்படுத்த மறுக்கிறீர்கள்.

ஐ.நா அமெரிக்காவின் கைப்பொம்மை என கூறுவது தவறு. அமெரிக்காவால், கியூபாவுக்கும், இஸ்ரேலுக்கும் எதிராக இரண்டு பிரேரணைகள் ஐ.நாவில் முன்வைக்கப்பட்ட போது அவை தோற்கடிப்பட்டிருந்தன. காரணம் அங்கே நியாயம் இருந்தது. இங்கு அது இல்லை என கூறியுள்ளார்.

1 comments:

தமிழ்மகன் said...

கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons