flashvortex

Thursday, April 5, 2012

இங்கிலாந்து அபார ஆட்டம் * இலங்கை திணறல்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், கேப்டன் ஸ்டிராஸ், அலெஸ்டர் குக் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி முன்னிலை நோக்கி செல்கிறது. சொந்த மண்ணில் இலங்கை பவுலர்கள் சோபிக்கத்தவறினர்.
இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது.

சுவான் துல்லியம்:
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணிக்கு ரந்திவ் (12) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய மாத்யூஸ் (57) ஓரளவு நம்பிக்கை அளித்தார். அடுத்து வந்த ஹெராத் (2), லக்மல் (0) சொற்ப ரன்களில் வெளியேற, முதல் இன்னிங்சில் இலங்கை அணி 275 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. தமிகா பிரசாத் (12) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் சுவான் 4, ஆண்டர்சன் 3, பிரஸ்னன் 2, ஸ்டீவன் பின் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

சூப்பர் துவக்கம்:
பின், முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு ஸ்டிராஸ், குக் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இலங்கை பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த போது ஸ்டிராஸ் (61) அவுட்டானார். இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. குக் (77), டிராட் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் தில்ஷன் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

1 comments:

தமிழ்மகன் said...

கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons