flashvortex

Monday, May 7, 2012

லெனினை விஷம் வைத்து கொன்றார் ஸ்டாலின்? வரலாற்று வல்லுனர் தகவல்

ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் விளாடிமிர் லெனினை, அவரின் தோழர் ஜோசப் ஸ்டாலின் விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என, சரித்திர வல்லுனர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய புரட்சியாளர் லெனின், அதிபரான பின் தனக்கு பின் நாட்டையும், கட்சியையும் வழி நடத்தி செல்ல தகுதியானவர் ஸ்டாலின் என, முதலில் கருதினார். ஆனால், ஸ்டாலினின் சர்வாதிகார போக்கால், அதிருப்தியடைந்த லெனின், லியோன் ட்ராட்ஸ்கியை கட்சியின் பொது செயலராக அறிவிக்க நினைத்தார். "இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின், லெனினை விஷம் வைத்து கொன்றுள்ளதாக, நான் கருதுகிறேன்' என, ரஷ்ய வரலாற்று வல்லுனர் லெவ் லூரி என்பவர், தனது ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

வரலாற்று வல்லுனர் லூரி, தனது ஆய்வு கட்டுரையில் கூறியிருப்பதாவது:ஸ்டாலின், தன் எதிரிகளை விஷம் வைத்து கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதே பாணியை தான், அவர் லெனின் விஷயத்திலும் கையாண்டிருக்க வேண்டும். ஏனென்றால், லெனின் 53 வயதில் இறந்த பிறகு, அவரது மூளை இறுகி விட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. லெனின், தனது இறுதி காலத்தில் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற கருத்தும் உண்டு. அதன் பிறகு, அவருக்கு இரண்டு முறை பக்கவாதம் ஏற்பட்டது. முதல் பக்கவாதத்தால், அவர் எழுதும் திறனை இழந்தார். இரண்டாவது பக்கவாதத்தால், அவர் பேசும் திறனை இழந்தார். ஆனால், அவர் இறப்பதற்கு முன் வரை, நன்றாக பேசிக்கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது. நன்றாக பேசிக்கொண்டிருந்த நபர், மறுநாளே இறந்து போனதற்கு, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன். அவரது உடல் இன்னும் செஞ்சதுக்கத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இருந்தால், இப்போது கூட அவரது மூளையை பரிசோதிக்க முடியும்.இவ்வாறு லூரி, தனது ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கு விளக்கம் அளிக்கும் இந்தியா


சிறிலங்காவில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க இந்தியா எடுத்துவரும் காத்திரமான நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க இராஐங்க அமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இந்தியா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா விளக்கவுள்ளாரென இந்திய உயர் மட்ட இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து இந்தியாவிற்கு நேற்று சென்றடைந்த திருமதி ஹிலாரி கிளின்டன் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார். 

இன்றைய சந்திப்பின் போது இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலான நிலைவரம் குறித்தும் ஹிலாரியிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா எடுத்துரைப்பாரென்று இந்திய உயர்மட்ட இராஜதந்திர தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

சிறிலங்காவின் இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியா அக்கறையுடன் செயற்பட்டு வருவதும், அண்மையில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவிற்கு மேற்கொண்ட விஐயம் தொடர்பிலும் அமெரிக்க இராஐங்க அமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, சிறிலங்காவின் விடயத்தில் அமெரிக்காவுடன், அதன் ஆலோசனையின்படியே செயற்பட புதுடில்லி விரும்புவதாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய விஐயத்திற்கு முன்னர் ஹிலாரி கிளின்டன், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விஐயத்தினை மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

Thursday, April 5, 2012

ஒலிம்பிக்குக்காக லண்டன் செல்வோர் திருமணம் செய்ய தடை !


பிரிட்டனில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக செல்லும் விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு திருமணம் செய்துகொள்வதை பிரித்தானிய அதிகாரிகள் தடை செய்யவுள்ளனர். வெளிநாட்டவர்கள் பிரிட்டனில் வதிவிட உரிமை பெறுவதற்காக ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும். ஜூலை 27 முதல் ஓகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலுள்ள நாடுகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேருக்கு 6 மாத காலத்திற்கான பிரித்தானிய விஸா வழங்கப்படவுள்ளது.

பாம்பை பதம்பார்க்கும் அதியச சிலந்தி ஆபிரிக்காவில் !

ஆபிரிக்காவில் இருக்கும் ஒருவகை சிலந்திகள் பாம்பையே கொல்ல வல்லது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வகையான சிலந்திகள் தமது இரையைக் கொலைசெய்ய தமது நச்சுத்தன்மையுள்ள கொடுக்கைப் பயன்படுத்துவது இல்லை. சிலந்தி வலைகளையே பயன்படுத்துகிறது. பொதுவாக சிலந்திவலை என்றால் நாம் நினைப்பதுபோல மென்மையாக இருக்கும். அதில் பூச்சிகளும் சிறு புழுக்களும் சிக்கிக்கொள்ளும். ஆனால் பாம்பு சிக்கிக்கொள்ளுமா ? அவ்வளவு தூரம் கடினமான சிலந்திவலைகளை நீங்கள் பார்த்தது உண்டா ? ஆம் இங்கே காணப்படும் சிலந்திவலையானது மிக மிகக் கடுமையானது. இதில் பாம்பு சிக்கிக் கொண்டால் கூட அசையமுடியாத நிலை தோன்றும்.

இங்கிலாந்து அபார ஆட்டம் * இலங்கை திணறல்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், கேப்டன் ஸ்டிராஸ், அலெஸ்டர் குக் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி முன்னிலை நோக்கி செல்கிறது. சொந்த மண்ணில் இலங்கை பவுலர்கள் சோபிக்கத்தவறினர்.
இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் : டக்ளஸ் தேவானந்தா

ஐ.நா மனித உரிமை பேரவை விவகாரம் தொடர்பில், இலங்கை பாரளுமன்றில் கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளனர்.

ஈ.பி.டி.பி கட்சியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இவ்விவாதத்தில் தெரிவிக்கையில், உண்மையை கண்டரியும் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்குழுவின் அறிக்கையில் தமக்கும், தமது கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் விமர்சனங்கள் இருந்துள்ளன. ஈ.பி.டி.பி கட்சியை ஓர் துணை இராணுவ குழுவாக அறிவித்தல் என்பது ஏற்றுக்கூடியதல்ல என தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையிடம் அணுசக்தி- நீர்மூழ்கிக் கப்பல்

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துகொண்டுள்ளது.
சுமார் 100 கோடி டாலர்கள் பெறுமதியான இந்த ரஷ்யத் தயாரிப்புக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது.
இப்போது அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துகொண்டுள்ளது.முன்னதாக,சோவியத் தயாரிப்பு- நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா 1991ம் ஆண்டுவரை பயிற்சித் தேவைகளுக்காக வைத்திருந்தது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons