
யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது 140 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து, இந்த ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டதாக ஸ்ரீ ஜயவர்த்னபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் கலாநிதி பிரசாந்த பந்துல மண்டாவல தெரிவித்தார்.
விஜித யுகத்தில் பாதுகாப்பு கோட்டைக்கு வெளியில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்ட உலகின் ஒரே ஒரு நகரம் யாழ்ப்பாணம் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு அமைக்கப்பட்ட அனைத்து கட்டடங்களும் பாதுகாப்பான முறையில் காணப்படுகின்றமை விசேட அம்சம் என கலாநிதி பிரசாந்த பந்துல மண்டாவல குறிப்பிட்டார்.
இதன்படி எதிர்வரும் காலத்தில் இந்த கட்டடத்தை பாதுகாக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் கலாநிதி பிரசாந்த பந்துல மண்டாவல தெரிவித்தார்.




5:39 AM
jana
Posted in: 

0 comments:
Post a Comment