
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் நட்சத்திர துடுப்பாட்டக் காரருமான டான் பிராட்மேனை விடவும் இந்தியா அணியின்
சச்சின் டென்டுல்கரே சிறந்த துடுப்பாட்ட வீரர் என கிரிபித் பல்கலை ஆய்வாளர் டாக்டர் நிகோலஸ் ரோட் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு காலகட்டங்களில் விளையாடி உள்ள இந்த வீரர்களின் ரன் குவிப்பு புள்ளி விவரங்களை, பொருளாதார ரீதியான சூத்திரங்களின் அடிப்படையில் ஒப்பிட்டு ஆய்வு செய்ததில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதுவரை 184 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின் 15,183 ரன் (சராசரி: 56.02) குவித்து முதல் இடத்தில் உள்ளதாகவும்,
பிராட்மேன் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (1928&48) 6996 ரன் (சராசரி: 99.94) குவித்துள்ளார். மேலும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் டிராவிட் 4வது இடம் சுனில் கவாஸ்கர் 8 வது இடத்திலும் உள்ளனர்.




7:00 AM
jana
Posted in: 

0 comments:
Post a Comment