
இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சச்சின் டென்டுல்கருக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு காரணம் மத்திய அரசு பாரத ரத்னா விருது தொடர்பான சட்ட திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளமையாகும் என தெரியவருகின்றதுஇதற்கு காரணம் மத்திய அரசு பாரத ரத்னா விருது தொடர்பான சட்ட திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளமையாகும் என தெரியவருகின்றது.
இதுவரை கலை, இலக்கியம், அறிவியல், பொது வாழ்வில் சிறந்த நபர்கள் என்ற துறைகளில் மட்டும் வழங்கப்பட்டு வந்த பாரத ரத்னா விருது மாற்றம் செய்யப்பட்ட சட்டத்திட்டங்களுக்கு அமைய விளையாட்டுத் துறை வீரர்களுக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னர் அன்னா ஹசரே உட்பட, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், மற்றும் அரசியல்வாதிகள் பலரும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் விளையாட்டுத் துறையில் பாரத ரத்னா விருது பெறுவதற்கு சச்சின் மட்டுமில்லாமல் ஏராளமான வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




7:05 AM
jana
Posted in: 

0 comments:
Post a Comment