flashvortex

Thursday, December 29, 2011

உலகளவில் தேசிய கல்விக்கு இருந்த கௌரவத்தையும் அதன் தரத்தையும் அரசாங்கம் சீரழித்து விட்டது! பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் !


வெளியிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மாணவர்களோ பெற்றோரோ ஏற்றுக்கொள்ளக்கூடாது உலகளவில் தேசிய கல்விக்கு இருந்த கௌரவத்தையும் அதன் தரத்தையும் அரசாங்கம் சீரழித்து விட்டது என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வெளியாகியுள்ள அனைத்து பெறுபேறுகளையும் உடனடியாக ரத்துச்செய்து விட்டு மீள் திருத்தத்திற்கு உட்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தேசியளவில் மாணவர் போராட்டங்கள் மேலோங்கும் என்றும் ஒன்றியம் எச்சரித்துள்ளது.



அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று புதன் கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக, வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை விமர்சித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அதன்போது உரையாற்றிய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டளர் சஞ்சீவ பண்டார மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஒரு பரீட்சையினைக் கூட நடத்த முடியாதளவிற்கு அரசாங்கம் சீரழிந்துள்ளது. தேசிய கல்வியின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டுள்ளதுடன் மாணவ சமூகத்தை படுபாதாளத்தில் தள்ளி விட்டுள்ளது.


தற்போது வெளியாகியுள்ள உயர் தர பெறுபேறுகள் நம்பகத் தன்மையற்றவையாகும். இந்தப் பெறுபேறுகளைப் பரீட்சைக்கு தோற்றிய எந்தவொரு மாணவனும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.


மாணவர்களினதும் பெற்றோர்களினதும் எதிர்பார்ப்புகளை சீரழித்த அரசாங்கத்தை மன்னிக்க முடியாது. அரசாங்கம் குற்றத்தை மறைக்காது உடன் மீள் திருத்தத்திற்கு உத்தரவிட வேண்டும்.


இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் திணைக்களம் இந்தளவிற்கு அவமானப்பட்டோ சீரழிந்தோ காணப்படவில்லை.


உரிய நேரத்தில் வினாத்தாள்களை திருத்தம் செய்யாதமை மற்றும் பெறுபேறுகளை வெளியிடாது அவசரமாக செயற்பட்டமை என்பவற்றால் பரீட்சைகள் திணைக்களம் தீராத களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தேசிய கல்வியில் அரசியல் மயமாக்கலை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக்கூறினார். __
_

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons