flashvortex

Tuesday, December 27, 2011

டெஸ்டில் பத்தாயிரம் ரன்கள்: மஹேல ஜெயவர்த்தன சாதனை


டெஸ்ட் ஆட்டங்களில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை மஹேல ஜெயவர்த்தன அடைந்துள்ளார்.சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் பத்தாயிரம் ரன்களைக் கடந்துள்ள ஒன்பதாவது வீரர் இவர்.தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையில் டர்பனில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாளன்று மஹேல ஜெயவர்த்தன இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான 34 வயதுடைய ஜெயவர்த்தன, 127 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்களையும், 40 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

டெஸ்ட் ஆட்டங்களில் பத்தாயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டக்கூடிய நிலையிலுள்ள மற்றொரு இலங்கை வீரர் குமார சங்கக்கார ஆவார்.இவர் இந்த இலக்கை எட்ட மேலும் 800 ரன்கள் தேவை.சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் மஹேல ஜெயவர்த்தன அண்மையில்தான் பத்தாயிரம் ரன்களை கடந்திருந்தார்.சனத் ஜெயசூர்யாவுக்கு அடுத்தபடியாக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தன ஆவார்.356 சர்வதேச ஒரு நாள் ஆட்டங்களை விளையாடி 15 சதங்களுடன் 10ஆயிரத்து 59 ரன்களை அவர் குவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons