சிரியாவின் ஹோம்ஸ் நகரத்தில் பாபா அம்ர் வட்டகைக்குள் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிப் பணியாளர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
அந்த வட்டகையில் நிறைய பேர் உதவியை பெரிதும் நம்பிக் காத்திருக்கிறார்கள் என்பதால் தங்களுக்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முடிவு என செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏழு டிரக் வண்டிகளில் உணவு மற்றும் மருத்துவ உதவிப் பொருட்கள் கொண்டதாக இந்த வாகனத் தொடரணி அமைந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக சிரியன் அரசுப் படைகளால் கடுமையான தாக்குதலுக்கும் முற்றுகைக்கும் உள்ளாகியிருக்கும் பகுதி பாபா அம்ர் ஆகும்.
சிரியாவின் செம்பிறை சங்கத்துடன் இணைந்து இப்பகுதியில் இருக்கின்ற காயம்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களை வெளியே கொண்டுவந்து உதவிகள் வழங்குவது செஞ்சிலுவைச் சங்கத்தின் நோக்கமாகும்.
இந்த வட்டகையின் கட்டுப்பபாடடை அரச படையினர் கையில் எடுத்ததிலிருந்து பலரை கண்ட இடத்தில் வைத்து அவர்கள் கொன்று வருகிறார்கள் என அரசாங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.




5:28 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment