மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் ருனாகோமோர்டன் விபத்தில் பலியானார்.
இவர், நேற்று முன்தினம் உள்ளூர்ப் போட்டியில் பங்கேற்று விட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
இவர், நேற்று முன்தினம் உள்ளூர்ப் போட்டியில் பங்கேற்று விட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மத்தியடி ரினிடாட்டில் உள்ள சொலமன் ஹோச்சே நெடுஞ்சாலையில் செல்லும் போது இவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே மோர்டன் மரணமடைந்தார்.மோர்டன் 2002 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானதில் இருந்து இதுவரை 15 டெஸ்ட் , 56 ஒரு நாள் போட்டி, ஏழு ருவென்ரி 20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் இராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
இவரது மரணத்துக்கு பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் கூறுகையில்; நாங்கள் உண்மையான ஒரு வீரரை இழந்து விட்டோம். மோர்டனின் ஆத்மா அமைதியாக உறங்கும். ஆனால் அவர் நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பார். மேலும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் கெவின் பீற்றர்சன் கூறுகையில்; இன்று முழுவதும் மோர்டனின் குடும்பத்தினரின் நிலை குறித்து மட்டுமே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த அதிர்ச்சியை அவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. மோர்டன் மிகச் சிறந்த கடுமையான போட்டியாளர் என்று தெரிவித்தார்.

6:54 AM
jana
Posted in: 

0 comments:
Post a Comment